ராஜீவ் காந்தி கொலையாளி முருகனுக்கு பரோல்...? சிறைத்துறை தலைவரிடம் நளினியின் தாயார் மேல் முறையீடு

By Ajmal KhanFirst Published Jun 10, 2022, 12:34 PM IST
Highlights

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  ஆயுள் தண்டனை கைதியாக உள்ள முருகனுக்கு மத்திய சிறை கண்காணிப்பாளர் உத்தரவை ரத்து செய்து விடுப்பு வழங்க வேண்டும் என சிறைத் துறைத் தலைவருக்கு நளினியின் தாயார் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

பரோலுக்கு தகுதி இல்லை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  வேலூர் மத்திய சிறையில் முருகன் கடந்த 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை பெற்று வருகிறார்.இதே வழக்கில் தண்டனை பெற்ற அவரது மனைவி கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை பரோலில்  காட்பாடி பிரம்மபுரத்தில் தாயார் பத்மாவுடன்  தங்கியுள்ளார். இந்த நிலையில் முருகனுக்கு  6 நாட்கள் அவசர கால விடுப்பு வழங்க கோரி   சிறைத்துறைக்கு முருகனின் மாமியார் பத்மா ( நளினி தாயார்) மற்றும் மனைவி நளினி அளித்து இருந்தனர். அதனை பரிசீலனை செய்த வேலூர் மத்திய சிறைத்துறை.. பாகாயம் காவல்நிலையத்தில் 2019 மற்றும் 2021 இல் முருகன் மீது பதியப்பட்ட இரு வழக்குகள் நிலுவையில் இருப்பதால்  அவசரகால விடுப்புக்கு தகுதி பெறவில்லை என கூறி, மனுவை  வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கடந்த மே 28-ம் தேதி நிராகரித்தார். இந்தநிலையில் முருகனின் மாமியார் பத்மா, சிறைத்துறை தலைவருக்கு மேல்முறையீட்டு மனு அனுப்பியுள்ளார்.

மேல்முறையீடு செய்த நளினியின் தாயார்

அந்த மனுவில், மருமகன் முருகனுக்கு ஆறு நாட்கள் விடுப்பு வழங்க வேண்டி விண்ணப்பித்திருந்த மனுவை  சிறை கண்காணிப்பாளர்.. இரு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விடுப்பிற்கு தகுதி பெறவில்லை என காரணம் கூறி நிராகரித்துள்ளார். இரு வழக்குகளில் 2019இல் பதியப்பட்ட முதல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற விசாரணையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டாவது (2020) வழக்கில் குற்ற அறிக்கை இன்று வரை தாக்கல் செய்யவில்லை. எனவே, தமிழ்நாடு தண்டனை தள்ளிவைப்பு விதிகள் 35ன் படி முருகன் மீது எந்த வழக்கும் எந்த நீதிமன்றத்திலும் விசாரணை நிலுவையில் இல்லாததால் (  No pending trail)ஆறுநாள் அவசர விடுப்பிற்கு தகுதியுடையவர் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் உத்தரவை ரத்து செய்து முருகனுக்கு சிறை விதிகள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அந்த மனுவில் நளினியின் தாயார் பத்மா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிகரிக்கும் தற்கொலைகள்..! ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டம் ..! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

click me!