கல்யாணத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு தூக்கிட்டு மாப்பிள்ளை தற்கொலை! காரணம் சொல்லாமல் இறந்த கொடுமை...

 
Published : Feb 05, 2018, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
கல்யாணத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு தூக்கிட்டு மாப்பிள்ளை தற்கொலை! காரணம் சொல்லாமல் இறந்த கொடுமை...

சுருக்கம்

An 1 before the wedding was held in the jungle suicide

நெல்லை மாவட்டத்தில், திருமணம் நடைபெறவிருந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு கல்யாண மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் குப்பளம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் வெங்கடேஷ். வெங்கடேஷ் காற்றாலை நிறுவனத்தில் சூபர்வைசராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்கு நேற்று காலை வள்ளியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் வெங்கடேஷ் அவரது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் உறவினர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வெங்டேஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும்  சோகத்தில் ஆழ்ந்துள்ளது. வெங்கடேஷ் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!