அம்மா உணவகம்... அம்மா மருந்தகம்... அடுத்து வந்துடுச்சு அம்மா ‘பெட்ரோல் பங்க்!!’ - 10 இடங்களில் திறக்க திட்டம்...

Asianet News Tamil  
Published : Jun 16, 2017, 04:14 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
அம்மா உணவகம்... அம்மா மருந்தகம்... அடுத்து வந்துடுச்சு அம்மா ‘பெட்ரோல் பங்க்!!’ - 10 இடங்களில் திறக்க திட்டம்...

சுருக்கம்

amma petrol bunk in tamilnadu

தமிழகத்தின் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து அவ்வபோது பெட்ரோல் டீசல் விலையை மாற்றி அமைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டு வந்தன.

இதைதொடர்ந்து தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து அவ்வபோது பெட்ரோல் டீசல் விலையை மாற்றி அமைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டு வந்தன.

இதையடுத்து இன்றுமுதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில், தமிழகத்தின் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குறிப்பில், சேலத்தில் எடப்பாடி, சென்னையில் நந்தனம், திருவாரூரில் சுந்தரக்கோட்டை, வேலூரில் வாணியம்பாடி, நாகையில் கோவில் பத்து, மதுரையில் கப்பலூர், விழுப்புரத்தில் வானூர், கரூரில் கிருஷ்ணராயபுரம், திருச்சியில் மணப்பாறை, உள்ளிட்ட 10 இடங்களில் அம்மா பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அமைக்கும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

கர்நாடகத்தில் பால் கொள்முதல் செய்யும் ஆவின்.. தமிழக உழவர்களுக்கு துரோகம் இழைக்கும் அரசு.. அன்புமணி கண்டனம்
சென்னை நடுநடுங்க வைத்த கொலை.. ஒரே இரவில் குடும்பத்தை கருவறுத்த கும்பல்.. 3 நாட்களுக்கு பிறகு பெண்ணின் உடல் கண்டெடுப்பு!