"உருகும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கில் எப்படி அரிசி செய்ய முடியும்?" - உரக்கச்சொல்லும் உணவுத்துறை அமைச்சர்

 
Published : Jun 16, 2017, 03:16 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
"உருகும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கில் எப்படி அரிசி  செய்ய முடியும்?" - உரக்கச்சொல்லும் உணவுத்துறை அமைச்சர்

சுருக்கம்

minister kamaraj questions about plastic rice

உருகும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கில் அரிசி தயாரிப்பது சாத்தியமில்லை எனவும், பிளாஸ்டிக் அரிசி இந்தியாவில் எங்கும் கைப்பற்றப்படவில்லை எனவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வதாக அடுத்தடுத்து புகார்களும் வலைதளங்களில் எச்சரிக்கை புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்து மக்களை பீதியடைய செய்கின்றன.

இது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு முகாம் நடத்தி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  

இதனிடையே பிளாஸ்டிக் அரிசியில் சமைத்து பந்து போல் அடித்து அடித்து விளையாடும் வீடியோ இன்னும் குறைந்தபாடில்லை.

மேலும், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் எனவும், தமிழகத்தில் கலப்படம் தொடர்பான புகார்களை94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக நடக்கும் சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசினார்.

அப்போது, உருகும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கில் அரிசி தயாரிப்பது சாத்தியமில்லை எனவும், பிளாஸ்டிக் அரிசி இந்தியாவில் எங்கும் கைப்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் அரிசி பற்றி மாயத்தோற்றம் உருவாக்கி சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!