
அரியலூரில் புதிய சட்ட திருத்த மசோதாவுக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர்களுக்கு எதிரான சட்ட திருத்த மசோதாவை அனைத்திந்திய பார் சபை தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா ஆதரிப்பதாக கூறினார்.
அவரின் இந்தக் கருத்து, எந்த வழக்கறிஞர்கள் சங்கத்துடனும் ஆலோசிக்காமல் அவர் தெரிவித்துள்ளார்.
அதனைக் கண்டித்து அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “தமிழக அரசு, நீதிமன்ற முத்திரைவில்லை சட்டத்திருத்தத்தில் புதிய கட்டண விதிமுறையை கொண்டு வந்து பலமடங்கு உயர்த்தியுள்ளதை வாபஸ் பெற வேண்டும்,
வக்கீல் சங்க தேர்தல் உடனே நடத்தப்பட வேண்டும்” என்பன போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பரனம் பழனிசாமி தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் கோதண்டபாணி, செல்வராஜ், செல்வமணி, செந்தில் ஆகியோர் பேசினர். இதில் வக்கீல்கள் முத்துகுமார், ஜெயக்குமார், சங்கர், துரைராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.