பயணிகளே கவனத்திற்கு !! சென்னை டூ தாம்பரம் வரும் ஜூலை 4 ஆம் தேதி அனைத்து மின்சார இரயில்களும் ரத்து..

By Thanalakshmi V  |  First Published Jul 2, 2022, 12:59 PM IST

சென்னை - தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 


சென்னை - தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” சென்னை கடற்கரை முதல் தாம்பரம் செல்லும் இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணி மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  மேலும் தாம்பரம் முதல் சென்னை கடற்கரைக்கு செல்லும் இரவு 10. 25 மணி மின்சார ரயில்,  ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 11. 25 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:அதிர்ச்சி!! மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி.. இரண்டு உயிர்களை காவு வாங்கிய பின்பும் தொடரும் அவலம்..

Tap to resize

Latest Videos

இன்று மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்களில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செல்லும் ரயில்கள், தாம்பரம் முதல் சென்னை கடற்கரைக்குச் செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு வருகின்ற ஜூலை 5ஆம் தேதி முதல் வழக்கம் போல அனைத்து மின்சார ரயில்களும் இயக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள்து.

மேலும் படிக்க:தமிழகத்தின் அணைகளை பாதுகாக்க அமைப்பு... அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கியது தமிழக அரசு!!

click me!