9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை- பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு விவரம் இதோ

Published : May 13, 2025, 12:48 PM ISTUpdated : May 15, 2025, 11:00 PM IST
pollachi case

சுருக்கம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவ வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

 பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு விவரம் : பொள்ளாச்சியில் நடைபெற்ற இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 6 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் இன்று காலை பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் படி, குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்  பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (வயது25) முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.

 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேர் கைது

அடுத்ததாக சபரிராஜன்(25), வசந்தகுமார்(27), மணிவண்ணன்(25) சதீஷ் (28) ஹேரேன் பால்(29), அருளானந்தம்(34), அருண்குமார் (30) பாபு என்ற பைக் பாபு (34) என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் 50- க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 40 மின்னணு தரவுகள், சுமார் 200 ஆவணங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளது. 

குற்றவாளிகள் மீதான வழக்குகள் என்ன.?

இவர்கள் மீது 120 B கூட்டுசதி, 366 - பெண்ணை கடத்தி செல்வது, 370 - கடத்தி செல்ல தூண்டுவது, 376 d - கூட்டு பாலாத்காரம், 509 பெண்ணின் கண்ணியத்தை அவமதிப்பது, 354 a பாலியல் துன்புறுத்தல், 354 b பெண் மீது வன்முறை கையாளுதல், 66,67 தகவல் தொழில் நுட்ப சட்டம் என பல பிரிவுகளில் வழக்கு பதிவு 

இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - தண்டனை விவரம் என்ன.?

இதனையடுத்து நீதிபதி 9 பேருக்கான தண்டனை விவரத்தை தற்போது அறிவித்துள்ளார். அதன் படி,  9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. .

சபரி ராஜன் 4 ஆயுள் தண்டனை, 

திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை, 

சதிஷ்க்கு 3 ஆயுள் தண்டனை

வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை

மணிக்கு 5 ஆயுள் தண்டனை

பாபுவிற்கு 1 ஆயுள் 

அருளானந்திற்கு ஒரு ஆயுள் 

ஹரோன் பாபுவிற்கு 3 ஆயுள் 

அருண்குமாருக்கு 1 ஆயுள் தண்டனை

 

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!