”வங்க கடலில் உருவாகிறது புயல்”.. சூறாவளி காற்றும் வீசும்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை..! வானிலை மையம் அலர்ட்..

Published : May 06, 2022, 02:13 PM IST
”வங்க கடலில் உருவாகிறது புயல்”.. சூறாவளி காற்றும் வீசும்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை..! வானிலை மையம் அலர்ட்..

சுருக்கம்

தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுதினம் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இன்று காலை, தெற்கு அந்தமான்‌ மற்றும்‌ அதனை ஓட்டியுள்ள தென்‌கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஓர்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது
வடமேற்கு திசையில்‌ நகர்ந்து நாளை (07.05.2022) மாலை காற்றமுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்‌. இது 08.05.2022 அன்று புயலாக மேலும்‌ வலுப்பெற்று வடமேற்கு திசையில்‌ நகர்ந்து 10.05.2022 அன்று ஆந்திரா-ஓரிசா கடற்கரை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதியில்‌ நிலவக்கூடும்‌.

06.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

07.05.2022: மேற்கு தொடர்ச்ச மலை பகுது மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருப்பத்தூார்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய
லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

08.05.2022. 09.05.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

10.05.2022 வரை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழகத்தில்‌ அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்‌சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌.

 சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்‌சியஸை ஓட்டி
இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

06.05.2022: தெற்கு அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

07.05.2022: அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ மத்திய ழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 6 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

08.05.2022: தென் கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 55 முதல்‌ 66 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 75 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌
இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

09.05.2022: மத்திய வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 6 முதல்‌ 75 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 85 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. வடக்கு அந்தமான்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்ககடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

10.05.2022: மத்திய மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்துய கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 6 முதல்‌ 75 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 85 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாளில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி