பெரம்பலூரில் மர்மமான முறையில் இறந்த ஐஸ்வர்யாவின் மரணத்தில் மர்மம் நீடிப்பதால், இதுகுறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் ஐஸ்வர்யாவின் பெற்றோரிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் புதுக்காலனி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகள் ஐஸ்வர்யா (20). இவர் குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமிக்கு சொந்தமான விவசாயக் கிணற்றில், கடந்த 16-ஆம் தேதி மர்மமாக இறந்து கிடந்தார்.
ஐஸ்வர்யாவின் தந்தை தங்கவேல் அளித்த புகாரின் பேரில், அவரது காதலன் நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்தீபன், அவரது நண்பன் சின்னசாமி ஆகியோர் மீது பெரம்பலூர் காவலாளர்கள் வழக்குப் பதிந்து சின்னசாமியைக் கைது செய்தனர்.
வெளிநாட்டுக்கு தப்பியோடிய பார்த்தீபனை காவலாளர்கள் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய முதுநிலை ஆய்வு அதிகாரிகள் இனியன், லிஸ்டர் ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் மதுரை பாண்டியராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் ஐஸ்வர்யாவின் பெற்றோரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.
மேலும், ஐஸ்வர்யாவின் குடும்பத்தினருக்கு அரசு வழங்கிய காசோலைக்கான தொகை செலுத்தாததன் காரணம் குறித்து குரும்பலூர் வங்கியாளர்களிடம் கேட்டறிந்தனர்.
பின்னர், பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்கின் தன்மை குறித்து கேட்டறிந்த அவர்கள், ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க மாவட்ட செயலர் என்.செல்லதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி இரா.கிட்டு, மாதர்சங்க மாவட்ட செயலர் எ.கலையரசி, சிபிஎம் வட்ட செயலர் எஸ்.பி.டி. ராஜாங்கம் உள்ளிட்டோர் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனுவை பெரம்பலூர் காவல் நிலையத்தில் நேற்று அளித்தனர்.
ஐஸ்வர்யாவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்; ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் விசாரணை…