
சிபிஐ நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு…பயத்தில் மாறன் பிரதர்ஸ்…
ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பாக இன்று உத்தரவுபிறப்பிக்கப்படும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி O.P. சைனி அறிவித்துள்ளார்.
தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக பதவி வகித்தபோது தனது அதிகாரத்தைபயன்படுத்தி ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு கட்டாயப்படுத்தி விற்கச் செய்ததாக சி.பி.ஐ.கடந்த 2014-ம் ஆண்டு மாறன் சகோதரர்கள் மீது வழக்குத் தொடர்ந்தது.
டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், தயாநிதிமாறன், அவரது சகோதரர்கலாநிதிமாறன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இதேபோன்று, மேக்சிஸ் நிறுவனம் பெற்ற உதவிக்கு கைமாறாக கலாநிதி மாறனின் சன் குழுமத்திற்கு முறைகேடாக 743கோடி ரூபாய் கைமாறியதாக அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு மற்றொரு வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த 2 வழக்குகளும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி O.P. சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதை நீதிபதி 6 முறைஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு திரு. சைனி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாறன்சகோதரர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பாக,இன்று நிச்சயமாக உத்தரவுபிறப்பிக்கப்படும் என நீதிபதி சைனி அப்போது அறிவித்தார்.
இதனிடையே, 2ஜி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கூடுதல் சிறப்பு வாதம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்