நீட் மாணவர்களுக்கு விமானக்கட்டணம், தங்குமிடம் ஏற்படுத்தி தரப்படும்! ஃபீனிக்ஸ் அகாடமி அதிரடி...

 
Published : May 04, 2018, 04:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
நீட் மாணவர்களுக்கு விமானக்கட்டணம், தங்குமிடம் ஏற்படுத்தி தரப்படும்! ஃபீனிக்ஸ் அகாடமி அதிரடி...

சுருக்கம்

Air fareaccommodation for students you will be provided Phoenix Academy

நாடு முழுவதும் 6.5.2018 அன்று நீட் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்திலிருந்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அநியாயமாக சிபிஎஸ்இ கேரளம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்வு மையங்களை தீர்மானித்து அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை மாற்றி தமிழகத்திலேயே தேர்வு மையங்களை தீர்மானிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, உயர்நீதிமன்றமும் அவ்வறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவர்கள் - பெற்றோர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்கான பயண டிக்கட்டுகளையும் ரத்து செய்துவிட்டனர்.

இதனையடுத்து , இதனால் வெளிமாநிலங்களில் சென்று தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் குழப்பமடைந்து பதற்றத்தில் உள்ளனர். ஒரு நாள் இடைவெளியில் ரயில்  டிக்கட் உறுதி செய்வது கடினம் என்பதால் பலர் தேர்வுக்கு போக முடியாத பெரும்பாதிப்புக்குள்ளாகி உள்ளதால், நீட் தேர்வு எழுத ராஜஸ்தான், கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு விமானக்கட்டணம், தங்குமிடம் ஏற்படுத்தி தரப்படும் என ஃபீனிக்ஸ் அகாடமி தெரிவித்துள்ளது.

மாணவர்கள் உதவிக்கு 7401717000, 7401717111, 7401717222 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஃபீனிக்ஸ் அகாடமி கூறியுள்ளது.
சற்றுமுன், ஃபீனிக்ஸ் அகாடமியை தொடர்பு கொண்டு பேசியதில், நேற்று இரவு ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான், சிக்கிம், ஹைதராபாத், கொல்கத்தாவிற்கு விமானம் டிக்கட் மற்றும் தங்குமிடம் அனைத்தையும் ஃபீனிக்ஸ் அகாடமி ஏற்றுக்கொண்டுள்ளது அதேபோல, எர்ணாகுளம் திருநெல்வேலி மற்றும் மதுரையிலிருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாம்.

தொடர்ந்து பேசிய அவர் நேற்று இரவு எங்களது வேலையே துவங்கினோம் இன்று இரவுக்குள் மாணவர்களுக்கு டிக்கட் கிடைத்துவிடும் எனக் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? பனியின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் இதோ!
வாட்ஸ்அப்பில் வந்த வில்லங்கம்.. டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.52 லட்சம் அபேஸ்!