அதிமுக-பாஜக கூட்டணி: திமுகவை வீழ்த்த 'மெகா' வியூகம்!- இபிஎஸ்யை கொண்டாடும் செயற்குழு

Published : May 02, 2025, 08:52 PM IST
அதிமுக-பாஜக கூட்டணி: திமுகவை வீழ்த்த 'மெகா' வியூகம்!- இபிஎஸ்யை கொண்டாடும் செயற்குழு

சுருக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு அதிமுக செயற்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நெருங்கும் தேர்தல்- அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்கு ; தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பலம் வாய்ந்த கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த அதிமுகவும் பலம் வாய்ந்த பிரம்மாண்ட கூட்டணிக்கு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பாஜகவோடு மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் பாஜக- அதிமுக கூட்டணி அமைந்த பிறகு நடைபெறுகின்ற முதல் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணிக்கு வரவேற்பு தெரிவித்தும், திமுக அரசை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

திமுகவிற்கு கண்டனம்

அந்த வகையில், 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது 525 வாக்குறுதிகளை தந்து நிறைவேற்ற முடியாத தவறான தகவல்களைத் தந்த அனைத்து தரப்பு மக்களின் ஏமாற்றி வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம். நீட் தேர்வு  விஷயத்தில் கபட நாடகம் நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களின் வாய்ஜாலத்தில் மாணவ, மாணவியரும் மக்களும் இனியும் நம்பத் தயாராக இல்லை.  எனவே அடுத்தவர்களின் மீது பழி போட்டு போகாத ஊருக்கு வழி காட்டுவது போல ஏமாற்று வேலைகளை செய்யாமல் மாணவர் சமுதாயத்திடமும், பெற்றோர்களிடமும் தமிழக மக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

விலைவாசி உயர்வு- அதிமுக கண்டனம்

திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் கடுங்கோபத்தை மறைக்கவே மொழிக் கொள்கை கல்விக் கொள்கை கச்சத்தீவு மீட்பு தொகுதி மறு வரையறை மாநில சுயாட்சி என நாடகமாக்கி கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கண்டனம். கச்சத்தீவை தாரை வரத்து காரணமாக இருந்தது விட்டு தற்போது அக்கறை உள்ளது போல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதும் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டுவது உள்ளிட்ட நாடகங்களை நடத்தி வரும் திமுகவிற்கு கண்டனம் அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வையும் கட்டுமான பொருட்களை விலை உயர்வும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.

அதிமுக - பாஜக கூட்டணி

திமுக என்கிற பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகளைக் கூட்டணியில் இடம்பெறச் செய்து 'மெகா' கூட்டணியை அமைப்பதற்கு வியூகம் வகுத்துவரும்  எடப்பாடியார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டும், நன்றியும்!  புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியிலே செயல்பட்டு, ஆளுமைத் திறன் மிக்க அரசியல் தலைவராக,  எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். எதிரிகளை வீழ்த்தி,துரோகிகளை ஓட ஓட விரட்டி கழகம் காத்த எடப்பாடியார் அவர்களை கழகத் தொண்டர்கள் 'புரட்சித் தமிழர்' என்று வாழ்த்தி மகிழ்கிறார்கள்.

எடப்பாடிக்கு பாராட்டு

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு, அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, கழகம் மகத்தான வெற்றியைப் பெறுவதற்கு, அஇஅதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் தொடக்கமாக, பா.ஜ.க-வுடன் கூட்டணியை அமைத்தும், தீய சக்தி திமுக-வை பொது எதிரியாக பாவிக்கும் மனநிலையில் உள்ள அரசியல் கட்சிகளை கூட்டணியில் இடம்பெறச் செய்து, 'மெகா' கூட்டணியை அமைப்பதற்கு வியூகம் வகுத்துவரும், கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடியார் அவர்களுக்கு இச்செயற்குழு தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

எடப்பாடிக்கு முழு ஆதரவு

பொது எதிரியை வீழ்த்த ஒத்தக்கருத்துடையவர்கள் ஒன்றிணைவது கூட்டணி அந்த வகையில் மக்கள் விரோதடியா திமுக அரசை வீழ்த்துவதற்கு அதிமுக தலைமையிலான கூட்டணி தொடக்கமாக பாஜகவுடன் வெற்றி கூட்டணி அமைத்ததற்கு இந்த செயற்குழு முழு மனதிலும் ஆதரவை அளிக்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!