ஒரே பாணியில் தொடர் கொலைகள்.! தமிழக காவல்துறை செயலிழந்து போய்விட்டதா.? அண்ணாமலை கேள்வி

Published : May 02, 2025, 04:07 PM IST
ஒரே பாணியில் தொடர் கொலைகள்.! தமிழக காவல்துறை செயலிழந்து போய்விட்டதா.? அண்ணாமலை கேள்வி

சுருக்கம்

ஈரோட்டில் வயதான தம்பதியை கொலை செய்து நகையை கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவம் குறித்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார். 

தமிழகத்தில் தொடர் கொலைகள்

தமிழகத்தில் தொடர் கொலைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் வயதான தம்பதியை கொலை செய்து நகையை கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.  தனியாக வசித்து வருபவர்களைக் குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

ஒரே பாணியில் கொலைகள்

கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையத்தில்,  தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். அனைத்துக் கொலைகளுமே, சுமார் 50 கி.மீ. சுற்றளவில்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதுவரை ஒரு குற்றவாளி கூடக் கைது செய்யப்படவில்லை. தமிழகக் காவல்துறை செயலிழந்து போய்விட்டதா என்ன?  பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர்,

மொத்த வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றிடுக

அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில குற்றங்கள் மட்டுமே நடைபெறுகின்றன என்று சட்டமன்றத்தில் சாதாரணமாகக் கூறுகிறார். ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா?  திமுக அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. இந்த ஒட்டு மொத்த வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். இனியும் முதலமைச்சர் இதனை மூடி மறைக்க முயல்வாரேயானால், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித உறுதியும் இல்லை என்பதுதான் பொருள். என அண்ணாமலை விமர்சித்துள்ளார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி