இபிஎஸ் தேர்தல் வியூகம்! 2026ல் அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்! ஆர்.பி.உதயகுமார்!

Published : Apr 27, 2025, 12:00 PM ISTUpdated : Apr 27, 2025, 12:05 PM IST
 இபிஎஸ் தேர்தல் வியூகம்! 2026ல் அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்! ஆர்.பி.உதயகுமார்!

சுருக்கம்

எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் கொண்டாட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணி, திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்ட ஆலோசனை கூட்டமானது சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், எஸ்.பி. வேலுமணி மற்றும் வைகைச் செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிமுக - பாஜக கூட்டணி

இதனையடுத்து ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்: பாஜகவுடன் அதிமுக  கூட்டணி வைப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய தயாரா என அவர்களிடம் முன் வைக்க முடியுமா என்று தமிழக முதல்வர் எடப்பாடியை பார்த்து கேட்டதற்கு; பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது ஏன் தமிழக முதல்வருக்கு இப்படி ஒரு நில நடுக்கம் ஏற்படுகிறது. நீங்கள் கூட்டணி வைத்தால் அது  புண்ணியமா. நாங்கள் கூட்டணி வைத்தால் அது பாவமா..? எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வியூகத்தை வகுத்து திமுகவை வீழ்த்துவது அனைத்திந்திய அண்ணா திராவிடத்தின் தலைமையிலான முதல் வெற்றி. திமுகவை எதிர்ப்பதற்கு இடமே இல்லை. தமிழகத்தில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி என்று கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தவுடன் கூட்டணி ஆட்சியா, தனித்த ஆட்சியா என்ற பேச்சு எழும் அளவிற்கு உருவாகி இருக்கிறது. ஆகவே இரண்டாம் இடத்திற்கு போட்டி என்பது மாறி தற்பொழுது ஆட்சி அமைக்கும் நிலைக்கு உருவாகியுள்ளது என்பதே பேசு பொருளாகி இருக்கிறது.

இதையும் படிங்க: விஜய்யோடு கூட்டணி, அதிமுகவில் துணை முதலமைச்சர் பதவி.! நிராகரித்தது ஏன்.? திருமா பரபரப்பு பேச்சு

மக்கள் பிரச்சனைக்கு திமுக முக்கியத்துவம் கொடுப்பதில்லை

தொகுதி மறுவரை கூட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு எந்த தகவலையும் அளிக்கவில்லை. மக்கள் பிரச்சனைக்கு திமுக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேகதாது மற்றும் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்  உயர்த்த வேண்டிய விவகாரம் போன்றவை குறித்து கர்நாடக மாநில துணை முதலமைச்சர் மற்றும் கேரள மாநில முதலமைச்சர் வரும்போது பேச தவறிவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர். அண்டை மாநிலங்களில் நட்பை பாராட்டி கோரிக்கையை கூட தமிழக முதல் அமைச்சர் வைக்கவில்லை. 

இதையும் படிங்க: அடிதூள்! முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?

இபிஎஸ் தேர்தல் வியூகம்

திமுக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். வலுவான கூட்டணி அமைந்துள்ளது 2026ல் அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் வியூகம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!