Murder : மீண்டும் பயங்கரம்.! அதிமுக வார்டு செயலாளர் ஓட ஓட விரட்டி கொலை.! நடுரோட்டில் துடிதுடித்து பலி

By Ajmal Khan  |  First Published Jul 28, 2024, 10:06 AM IST

கடலூர் பகுதியை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் மீது காரை மோதி கீழே சாய்த்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. இந்த சம்பவம் புதுவை- கடலூர் சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொடரும் அரசியல் கொலைகள்

தமிழகத்தில் அரசியல் நிர்வாகிகள் கொலை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் சேலத்தை சேர்ந்த அதிமுக பகுதி செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பாமக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டார். இப்படி அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அறங்கேறி வரும் நிலையில் கடலூர் பகுதியை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tap to resize

Latest Videos

கடலூர் அதிமுக நிர்வாகி கொலை

கடலூர் நவநீதம் நகர் பகுதியை சேர்ந்தவர் பக்தா (எ) பத்மநாதன்(43) இவர்  அதிமுக வார்டு செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருப்பனம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கோவில் கலை நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பக்தா மீது மர்ம கும்பல் காரை மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி பத்மநாதன் கீழே விழுந்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது.  புதுவை மாநில எல்லை பகுதியான திருப்பனாம்பாக்கம் என்ற இடத்தில் பக்தா வெட்டிக் கொல்லப்பட்டார்.

நடுரோட்டில் வெட்டி கொலை

கடலூர் பகுதியைச் சேர்ந்த நபர்கள் முன்விரோதம் காரணமாக வெட்டியதாக பாகூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பத்மநாதன் கடந்த ஆண்டு பாஸ்கர் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே பாஸ்கரின் கொலைக்கு பழி வாங்க இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். 

 

click me!