
அதிமுகவில் இப்போது பெரும் பிளவு ஏற்படுள்ளது. ஏற்கெனவே சசிகலா அணி, தினகரன் அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக பிரிந்து கிடக்கும் நிலையில், இப்போது அதிமுகவை கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியிலும் பெரும் புகைச்சல் உருவாகி இருக்கிறது. அதாவது அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார்.
துண்டு துண்டாக சிதறும் அதிமுக
இதனால் ஆத்திரம் அடைந்த இபிஎஸ், செங்கோட்டையனின் பதவியை அதிரடியாக பறித்தார். அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் இபிஎஸ்க்கு எதிராக செங்கோட்டையன், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஓரணியில் திரள உள்ளனர். இப்படியாக அதிமுக துண்டு துண்டாக சிதறும் நிலையில், எடப்பாடி பழனிசாயின் 5வது கட்ட சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி 5ம் கட்ட சுற்றுப்பயணம்
அதாவது 'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார். இப்போது 5வது கட்டமாக அவர் சுற்றுப்பயணம் செல்லும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:
தருமபுரி மாவட்டம்
தேதி: செப்டம்பர் 17, 2025 (புதன்)
மாவட்டம்: தருமபுரி
தொகுதி: தருமபுரி மற்றும் பாப்பிரெட்டிபட்டி
தேதி: செப்டம்பர் 18, 2025 (வியாழன்)
மாவட்டம்: தருமபுரி
தொகுதி: பாலக்கோடு மற்றும் பென்னாகரம்
செப்டம்பர் 19, 2025 (வெள்ளி): நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகள்.
செப்டம்பர் 20, 2025 (சனி): நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் தொகுதிகள்.
செப்டம்பர் 21, 2025 (ஞாயிறு): நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் தொகுதிகள்.
நீலகிரி, கரூர் மாவட்டம்
செப்டம்பர் 23, 2025 (செவ்வாய்): நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் உதகமண்டலம் தொகுதிகள்.
செப்டம்பர் 24, 2025 (புதன்): நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதி.
செப்டம்பர் 25, 2025 (வியாழன்): திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் தொகுதி.
செப்டம்பர் 26, 2025 (வெள்ளி): கரூர் மாவட்டம், கரூர் (கரூர் டவுன்) மற்றும் அரவக்குறிச்சி (வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை) தொகுதிகள்.