
ஆபாச வீடியோ தயாரித்து தருமபுரம் ஆதீனத்தை பாஜகவினருடன் இணைந்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலைச் சார்ந்த அதிமுக வழக்கறிஞரணி நிர்வாகி ஜெயச்சந்திரன் இப்பொது தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை கண்டுபிடிக்க தனிப்படை ஒன்று புதுச்சேரி விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மயிலாடுதுறை அருகே இருக்கும் மிகவும் பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் இந்திய அளவில் மிகப்பெரிய புகழ் பெற்ற ஒரு மடமாகும். இந்த ஆதீனத்தின் 27 வது குரு மகா சன்னிதானமாக ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தற்போது பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரக்காணம் அருகே விபத்து.. சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து - பயணிகள் 30 பேருக்கு காயம்!
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது. அதில் தருமபுரம் ஆதீனத்தின் தொடர்புடைய சில ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் இருப்பதாகவும். அதை தொலைக்காட்சியிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிடாமல் இருக்க தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கூறியும் சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் இது குறித்து போலீசாரிடம் சென்றால் மடத்தில் உள்ளவர்களுடைய உயிருக்கே ஆபத்து விளைவிக்கவும் தயங்கமாட்டோம் என்று அந்த கும்பல் மிரட்டியதாகவும் பெரும் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் இந்த விஷயத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க துவங்கிய நிலையில் செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு.
செய்யூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், திருவெண்காடு பகுதியை சேர்ந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் உள்ளிட்ட பலர் மீது புகார் எழுந்த நிலையில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அதிமுகவின் வழக்கறிஞர்கள் அணி நிர்வாகியான ஜெயச்சந்திரன் அவர்கள் தற்பொழுது தலைமுறைவாகியுள்ளதாகவும் அவரை பிடிக்க தனிப்படை ஒன்று தற்பொழுது புதுச்சேரி விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.