
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இன்று மதியம் சென்று கொண்டிருந்த தமிழக அரசு பேருந்து ஒன்று சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்நிலையில் அதில் பயணம் செய்த 30 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் சிக்கிய பயணிகள் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்ட போலீசார் தற்பொழுது சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததா? அல்லது வேறு ஏதும் பிரச்சினைகள் நிகழ்ந்ததாக என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.