
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் இருப்பை நிலைநாட்டிக் கொள்ள தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மாவட்ட வாரியாக கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 30ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.