முதல்வர் குறித்த தகவலை கேட்டு அதிமுக தீவிர தொண்டர் தற்கொலை…

 
Published : Dec 06, 2016, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
முதல்வர் குறித்த தகவலை கேட்டு அதிமுக தீவிர தொண்டர் தற்கொலை…

சுருக்கம்

அருப்புக்கோட்டை

முதல்வர் உடல்நிலை மோசமாக உள்ளது என்று நேற்று மாலை வந்த தகவலை கேட்டு, அதிமுகவின் தீவிர தொண்டர் விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (42). தனியார் நுாற்பு மில்லில் வேலை பார்த்து வந்தார். அ.தி.மு.கவின் தீவிர தொண்டரான இவர், நேற்று காலை வேலைக்கு சென்ற நிலையில், ஜெயலலிதா உடல் நலம் கடவலைகிடமான நிலையில் இருக்கிறார் என்று கூறிய செய்தியை கேட்டு, விடுமுறை கூறிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த சுப்புராஜ், ஊர் அருகில் உள்ள கல் குவாரியில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். முதல்வரின் உடல்நிலைக் குறித்த தகவலை கேட்டதற்கே, தன் குடும்பம் பற்றியும் சிறிதும் கவலையின்றி விஷம் குடித்து இறந்த சம்பவம் அவரது குடும்பத்தாரிடையே பேரதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரேமா என்ற மனைவி, மகன், மகள் உள்ளனர்.

இதுபோன்ற முதல்வரின் உண்மை விசுவாசிகள் அவரது உடல்நலம் குறித்த தகவலை அறிந்ததும் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இந்நிலையில் முதல்வர் இயற்கை எய்தினார் என்ற தகவலை கேட்டால் இன்னும் என்ன நடக்குமோ என்பது விடை தெரியாத கேள்வியே…

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 17 December 2025: நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்
100 நாள் வேலை திட்டத்தை மொத்தமாக ஒழித்துக்கட்ட துடிக்கும் மோடி அரசு.. திருமா கொந்தளிப்பு