கோவையின் முக்கிய இடங்களில் காவலாளார்கள் குவிப்பு; அசாம்பாவிதத்தை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடு…

First Published Dec 6, 2016, 11:27 AM IST
Highlights


கோவை

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு எதிரொலியாக கோவையில் நேற்று மாலை உயிரிழந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அசாம்பாவிதத்தை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடாக கோவையின் முக்கிய இடங்களில் 2000 காவலாளார்கள் குவிக்கப்பட்டனர். …

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவையிலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கோவையில் உள்ள காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் ரோடு, உக்கடம் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ்நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்களில் காவலாளார்கள் குவிக்கப்பட்டனர்.

அத்துடன் காவல் உயர் அதிகாரிகள் வாகனங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதுபோன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலாளர்களுக்கு அடிக்கடி வயர்லஸ் கருவி மூலம் காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை வழங்கிக்கொண்டே இருந்தனர்.

இதற்கிடையே நேற்று மாலை 6 மணிக்கு ஜெயலலிதா உடல்நிலை குறித்து திடீரென்று பரவிய வதந்தியை தொடர்ந்து, கோவை பெரியகடை வீதி, டவுண்ஹால், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், மளிகை கடைகள், நகைக்கடைகள், துணிக் கடை கள் உள்பட அனைத்து கடைகளும் படிப்படியாக அடைக்கப்பட்டன. இதனால் கடைவீதிகள், பொது மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில தனியார் பேருந்துகள் ஓடினாலும், சில பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சில பேருந்துகளில் வந்த பயணிகள் பாதி வழியில் ஆங்காங்கே இறக்கி விடப்பட்டனர். இதனால் பயணிகள் ஆட்டோக்கள் மற்றும் வருகிற வாகனங்களில் ஏறி தங்களது வீடுகளுக்கு சென்றனர். இதற்கிடையில் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காடு, வேலந்தாவளம், வாளையாறு உள்பட கேரளாவுக்கு செல்லும் தமிழ்நாடு அரசு பஸ்கள் மற்றும் கேரள அரசு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் மாலை 6 மணியில் இருந்து பயணிகள் இரவு வரை காத்துக் கிடந்தனர்.

பொள்ளாச்சி, உடுமலை, பழனி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் உக்கடம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்ட பிறகு நிறுத்தப்பட்டன. உக்கடம் பேருந்து நிலையத் துக்கு வந்த டவுண் பேருந்து பயணிகளை இறக்கி விட்ட பிறகு டெப்போக்களுக்கு சென்றன. உக்கடம் பேருந்து நிலையத்துக்குள் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்து வராததால், பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் உக்கடம் பேருந்து நிலையத்துக்குள் வராமல் சில பேருந்துகள், வெளியில் நின்று பயணிகளை ஏற்றிச்சென்றன. இதனால் அந்த பேருந்துகளில் அவசர, அவசரமாக முண்டியடித்துக் கொண்டு பயணிகள் ஏறினர். ஆனால் குடும்பத்தோடு வந்த பயணிகள் பஸ் பேருந்துகளில் ஏற முடியாமல் சிரமத்துக்கு ஆளானார்கள். இதற்கிடையில் முக்கிய இடங்களில் உள்ள கடை வீதிகளில் பொருட்கள் வாங்கி விட்டு, நீண்டநேரம் நின்றிருந்த பயணிகளை ஏற்றாமல் சென்ற பேருந்துகளை காவலாளார்கள் நிறுத்தி, அதில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இது போன்று காந்திபுரம், சிங்காநல்லூர் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களிலும் வெளியூர்களில் இருந்து வந்த பேருந்துகள் பயணிகளை இறக்கி விட்டு ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர் அந்த பேருந்துகள் டெப்போக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.

திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. ஒருசில ஆம்னி பேருந்துகள் மட்டும் இயங்கின. இது தவிர மாநகரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கயிறுகட்டியும், பேரல்களை அடுக்கி வைத்தும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு செய்து மூடப்பட்டன. இதனால் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப சென்ற பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். கோவையில் இருந்து, கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அரசியல் கட்சி அலுவலகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் காவலாளர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். கோவை இதயதெய்வம் மாளிகையில் காவலாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் அலுவலகம், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் யாருமில்லாமல் வெறிச்சோடி கிடந்தது.

இதேபோல் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, அன்னூர் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டன. திறந்திருந்த ஒருசில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்கள் வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பி சென்றனர். மேலும் பேருந்து நிலையங்களில் வெளியூர்களுக்கு செல்வதற்காக காத்திருந்த பயணிகள் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

tags
click me!