வெற்றிக் களிப்பில் அதிமுக தொண்டர்கள்…

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 01:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
வெற்றிக் களிப்பில் அதிமுக தொண்டர்கள்…

சுருக்கம்

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து, தூத்துக்குடியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் நடைபெற்ற அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

இதனை கொண்டாடும் வகையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இராஜகோபால், பகுதி கழக செயலாளர்கள் முருகன், ராமகிருஷ்ணன், எட்வின் பாண்டியன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ராஜசேகர், ராஜா, தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், முன்னாள் துணை மேயர் சேவியர், ஒன்றிய விவசாய அணி செயலாளர் சுரேஷ், வக்கீல் அணி நிர்வாகிகள் சந்திரசேகர் ஆன்ட்ரூ மணி, அதியசமணி, வெற்றிவேல் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள், மாணவரணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு வெற்றியைக் கொண்டாடினர்.
 

PREV
click me!

Recommended Stories

அடக்குமுறையால் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது ! CPI வீரபாண்டியன் அதிரடி பேட்டி
மத்திய அரசே மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாதே! களத்தில் இறங்கிய CPI வீரபாண்டியன் எச்சரிக்கை!