AIADMK - BJP Alliance: டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தயார் எனத் தெரிவித்த நிலையில், அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மதுரையில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழகத்தில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. அது ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணமாக இருக்கிறது. அதிமுக பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும். பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்கு அதிமுக வரவேண்டும். இல்லையென்றால் அழிந்துவிடும் என டிடிவி.தினகரன் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: அப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! என்ன காரணம்?
undefined
இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணிக்கு நேரமும் காலமும் இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஒழிக்கப்பட வேண்டும். சூழலை பொறுத்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குழந்தைகள் உயிருடன் விளையாடும் அழுகிய முட்டை அமைச்சர் கீதா ஜீவன் உணர வேண்டும்! இல்லைனா! அண்ணாமலை வார்னிங்!
டிடிவி.தினகரனை பொறுத்தவரை தன்மானத்தை விட்டு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாஜகவில் சரண்டராகிவிட்டார். யார் காலிலும் விழவேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. டிடிவி.தினகரன் போல பாஜகவின் காலில் அதிமுக விழ வேண்டிய அவசியம் இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு கூட வெற்றிபெறும் என்றார்.
மேலும் பேசிய அவர் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும். நிச்சயமாக மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள். இந்தியா முழுவதும் போற்றக்கூடிய மாபெரும் தலைவர் போற்றப்பட வேண்டுமே தவிர அவர் புகழை சிறுமைப்படுத்தக்கூடிய செயலை செய்யக்கூடாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.