பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிற்சங்கத்தினர் தருமபுரியில் ஆர்ப்பாட்டம்...

 
Published : Nov 16, 2017, 08:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிற்சங்கத்தினர் தருமபுரியில் ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

Agrarian Demonstrators Demonstration on Various Demands ...

தருமபுரி

அரூர் பெரிய ஏரி ராஜகால்வாய் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டத் தலைவர் கே.குமரேசன் தலைமை தாங்கினார்.  

இந்த ஆர்ப்பாட்டத்தில், "அரூர் பெரிய ஏரியின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,  

பதினெட்டு வார்டுகளிலும் உள்ள கழிவு நீர்க் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும்,  

அரூர்  வாரச்சந்தையில்  மேற்கூரைகள் அமைக்க வேண்டும்,

கச்சேரிமேடு, நான்கு வழிச்சாலை, பழையப்பேட்டை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நவீன வசதியுடன் கூடிய கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும்,

நகரின் அனைத்துத் தெருக்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம்.முத்து,  மாவட்டப் பொருளாளர் இ.கே.முருகன், வட்ட செயலர் வி.ஆறுமுகம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலர் கே.தங்கராசு,  மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, வட்டக்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.தனலட்சுமி,  வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சி.வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!