முழுவதும் இந்தியில் தான் இருக்கு... ஆத்திரத்தில் நிகழ்ச்சி நிரலை கிழித்தெறிந்த திருச்சி சிவா

By SG Balan  |  First Published Sep 18, 2023, 7:36 PM IST

நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சி நிரல் முழுவதும் இந்தியில் இருந்ததால், ஆத்திரம் அடைந்த திமுக எம்.பி. திருச்சி சிவா அவையிலேயே நிகழ்ச்சி நிரலைக் கிழித்து வீசி எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்.


நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சி நிரல் ஆங்கிலத்தில் இல்லாமல், இந்தியில் மட்டுமே இருந்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக எம்.பி. திருச்சி சிவா அதை கிழித்து எறிந்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜி20 உச்சி மாநாடு முடிந்த கையோடு நாடாளுமன்ற  சிறப்புக் கூட்டத்தொடரை மத்திய அரசு நடந்த கூட்டியிருக்கிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் நாள் நிகழ்வு பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த நிலையில், நாளை முதல் நாடாளுமன்றம் புதிய கட்டிடத்தில் கூட உள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த சிறப்புக் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்த அறிவிப்பு  வெளியிடப்படாததை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதனால் சில தினங்களுக்கு முன் மத்திய அரசு நிகழ்ச்சி நிரலை வெளியிட்டது. அதில் தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவது தொடர்பான மசோதா உள்பட 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு; 20 பேருக்கு உடல்நலக் குறைவு!

இந்நிலையில் துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை  தலைவருமான ஜெகதீப் தன்கர் ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தேசிய கொடியை ஏற்றினார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, நாடாளுமன்ற நிகழ்ச்சில் நிரல் இந்தியில் மட்டுமே  வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தாகக் கூறினார். கூட்டத்தில் வைத்தே நிகழ்ச்சியின் நிரலை கிழித்துப் போட்டு, மீண்டும் இதுபோல நடைபெற்றால் கொடுக்கும் அந்த இடத்திலேயே கிழித்து எறிவோம் என்றும் கண்டனம் தெரிவித்ததாக்க் கூறினார்.

தலைமை தாங்கிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இனிமேல் இதுபோல் நடக்காது என்று வாக்குறுதி அளித்தார் எனவும் திருச்சி சிவா தெரிவித்தார்.

அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை... அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

click me!