
நாகர்கோவில்
ஹைட்ரோகார்பனுக்கு எதிராக அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய ஆம் ஆத்மியினர் மூன்று பெண்கள் உள்பட 18 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி: ஆம் ஆத்மி கட்சியினர் 18 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து குமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன் நேற்று மாலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் திரளாக கூடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டார் காவலாளர்கள் அங்கு விரைந்துச் சென்று, “உங்கள் போராட்டத்திற்கு அனுமதி கிடையாது” என்றும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால், காவலாளர்களின் பேச்சுவார்த்தையை மறுத்து, தடையையும் மீறி ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
காவலாளர்கள், போராட்டம் நடத்திய மூன்று பெண்கள் உள்பட 18 பேரை உடனடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தை அனைவரும் சுற்றிநின்று வேடிக்கைப் பார்த்தனர்.