ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு – 3 பேர் படுகாயம்

Asianet News Tamil  
Published : Mar 03, 2017, 10:09 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு – 3 பேர் படுகாயம்

சுருக்கம்

In the bombing on the rss office 3 people were injured. They are in intensive care in hospital.

ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மீது குண்டு வீசியதில், 3 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரை சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி குந்தன் சந்திராவத் பேசியதாக  ஒரு வீடியோ காட்சி வெளியானது.

அதில்,‘கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த நாட்டை முன்னெடுத்து செல்லும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை கொன்று வருகிறார். அவர் ஒரு கொலைக்காரர். அவரது தலையை துண்டிப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்’ என பதிவாகி இருந்தது.

மேலும், பரிசாக கூறப்பட்ட ரூ.1 கோடியை எனது சொத்துகளை விற்று கொடுப்பேன் என தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ வைராக பரவி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ், முசோலினியிடம் இருந்து தங்களது அமைப்பின் கட்டமைப்பை மேற்கொண்டது. ஹிட்லரிடம் இருந்து சித்தாந்தத்தை பெற்றது என கூறி பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் கேரள மாநிலம் நடுப்புரம் அடுத்த கலாச்சி பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் அலுவலகம் உள்ளது. நேற்று இரவு இந்த அலுவலகம் மீது மர்மநபர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டு வீசினர். அந்த நேரத்தில் அலுவலகத்தில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அப்பகுதி மக்கள் ஓடிவந்து, படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் கம்யூனிஸ்ட் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இடையே கடும் மோதல் ஏற்படும் சூழல் அங்கு நிலவுகிறது. அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் உதவித் தொகை.. எவ்வளவு தெரியுமா? விண்ணப்பிப்பது எப்படி?
SIR: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சூப்பர் சான்ஸ்.. 10 நாள் அவகாசம் நீட்டிப்பு!