
நீட் தகுதித் தேர்வு வழக்கில் தீர்வு கிடைத்த பிறகே தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற கல்லூரி விழாவில், தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருப்பதால், அதில் இறுதி தீர்ப்பு கிடைத்த பிறகே, தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறினார்.
நடப்பாண்டில் தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவ பட்ட மேற்படிப்பில் 350 இடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர் ஜோ தெரிவித்தார்.