“தமிழ்நாட்டில் பெய்யும் இந்த மழையால் வறட்சி நீங்கப் போவதில்லை” - எச்சரிக்கும் வெதர்மேன்!!

First Published Jun 11, 2017, 6:02 PM IST
Highlights
tamil nadu weatherman warning about drought


சென்னையிலோ அல்லது தமிழ் நாட்டில் பெய்யும் இந்த மழையால் வறட்சியும் நீங்க போவதில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,
“சென்னையில் இன்றில் இருந்து வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மலைப் பகுதிகள் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு பகுதியிலும் கன மழை பெய்ய கூடும்.

நான் கடந்த 5 நாட்களில் 2-3 நாட்கள் டமால் டுமீல் என்று மழை பெய்யும் என்று முன்பே கூறி இருந்தேன். இன்றோடு 5 வது நாள் முடிய போகிறது. அதில் ஒரே ஒரு நாள் மட்டும் நல்ல மழை பெய்தது. நேற்று வட சென்னை மற்றும் மேற்கு சென்னையில் லேசான மழை பெய்தது. பயனற்ற மேகங்களால் சலிப்பான நாட்களை பார்த்தோம். நேற்று பெய்த லேசான மழையால் இப்போது நிலைமை மாறி விட்டது.

சென்னையில் மழை பெய்வதற்கான நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால் அதற்கு நல்ல சூரிய ஒளியும் வெப்பமும் தேவை.

இன்று முதல் சென்னையில் மழை பெய்வதற்கான நல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்படி பெய்யும்போது நானே பதிவு இடுகிறேன். ஆனால் ஒன்றை நினைவு கொள்ளுங்கள். சென்னையிலோ அல்லது தமிழ் நாட்டில் பெய்யும் இந்த மழையால் வறட்சியும் நீங்க போவதில்லை.

மேலும் நீர் நிலைகளுக்கு தண்ணீரும் வர போவதில்லை. 1996 வருடத்தை தவிர ஜூன் மாதத்தில் இருந்து செப்டெம்பர் மாதம் வரை ஏரிகளுக்கு தண்ணீர் வந்ததாக சரித்திரம் இல்லை. இந்த வெப்ப சலன மழையால் நிலத்தடி நீர் உயரும்.
கர்நாடகாவில் கன மழை பெய்தது. மேலும் இன்றும் மழை தொடரும்.

கர்நாடகாவில் பல இடங்களில் 200-300 mm மழை பெய்தது. குறிப்பாக உடுப்பி, ஷிமோகா மற்றும் உத்தர கன்னட மாவட்டத்திலும் இந்த மழை இருந்தது.குடகு மாவட்டத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடுப்பு பகுதிகள் ஆன பாகமண்டலா மற்றும் தலகாவிரி பகுதிகளில் முதல் மழை பெய்தது. ஆனால் தீவிர மழை இல்லை.

குடகில் நல்ல மழை பெய்தால் அந்த நீர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு செல்லும். அதனால் மேட்டூர் அணை பயன் பெறும். குடகுவில் இன்று தீவிர மழை பெய்யும்.

நீலகிரி மற்றும் கோவை மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அது இன்றும் தொடரும்.

எதிர் பார்த்த மாதிரியே பருவ காற்று தீவிரம் அடையும் போது நீலகிரி மற்றும் கோவை மலை பகுதிகள் நல்ல மழையை பெறும். எவ்வளவு மழை பெய்தது என்று அறிவதற்காக வானிலை மைய அறிக்கையை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்.

பிரபல மலை பகுதிகள் ஆன சின்ன கல்லார், தேவலா, அவலாஞ்சி, ஆனைமலை, மேல் பவானி மற்றும் சோலையாறு போன்ற இடங்களில் நல்ல மழையை பெறும்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

click me!