
திருவாரூர்,
திருவாரூரில், நாடா புயல் வீசியபோது கடும் மழை பெய்து இயல்பு வாழ்க்கை பாதித்தது. தற்போது, கடும் பனிப் பொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு ஆளானார்கள்.
திருவாரூரில் இந்தாண்டு வடகிழக்குப்பருவ மழை போதுமான அளவு பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான நாடா புயல் காரணமாக திருவாரூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. புயல் கரையை கடந்த பின்னர் மழை பெய்வதும் நின்றது. பின்னர், கடந்த 2 நாள்களாக திருவாரூரில் வெயில் அடித்து வந்தது.
இந்த நிலையில் திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை கடும் பனிப்பொழிவு இருந்தது.
காலை 8 மணி வரை சூரிய வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை. திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
திருவாரூர் கமலாலய குளத்தை பனி சூழ்ந்தது. இதில், பனிக்குளம் போல காட்சியளித்தது. குளம் நடுவே உள்ள நாகநாதர் கோவிலை பனி சூழ்ந்திருந்ததை நடைபயிற்சி செய்தவர்கள் அதனை இரசித்தபடி சென்றனர். பனிப்பொழிவு காரணமாக குளிர் வாட்டியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.