சென்னையில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் 13 மணிநேரமாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை வீட்டில் இருந்து அழைத்துச் செல்கின்றனர்.
சென்னையில் உள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இன்று காலை முதல் 13 மணிநேரமாக விசாரணை நடத்திவந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
பொன்முடி மகன் கவுதமசிகாமணியையும் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரிடம் அமலாக்கத்ததுறையின் இன்னொரு அலுவலகத்தில் (யூனிட் 1) வைத்து விசாரணை நடத்தப்படுகிறது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் திங்கட்கிழமை காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கௌதம சிகாமணி வீடு உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனையிட்டது.
அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட 11 பேருக்கு போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர் பதவி
சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்திருக்கிறதா என்ற நோக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடக்கிறது.
அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.70 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இத்துடன் தொடர்புடைய ஆவணங்களும் அதிகாரிகளுக்குக் கிடைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிளாட்பாரத்தில் தூங்கிய சிறுவனை பூட்ஸ் காலால் உதைத்து எழுப்பிய ரயில்வே போலீஸ்!