முதல்வர் ஜெ. உடல்நிலை பாதிப்பு – மேலும் ஒரு அதிமுக பிரமுகர் பலி

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 12:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
முதல்வர் ஜெ. உடல்நிலை பாதிப்பு – மேலும் ஒரு அதிமுக பிரமுகர் பலி

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தவுடன் அதிமுக பிரமுகர் மாரடைப்பால் இறந்தார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த குட்டுப் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. அதிமுக பிரமுகர். அப்பகுதி அதிமுக கிளை செயலாளராக உள்ளார். இவரது மனைவி நாச்சம்மாள்.

நேற்று மாலை முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டதாக தொலைக்காட்சி செய்திகளில் வெளியானது. அப்போது, வீட்டில் இருந்தபடி செய்தியை பார்த்த பெரியசாமி, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிமுகவினர் இடயே பெரும் அதிர்ச்சியையும், கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை இதே நேரத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சன்னியாசிப்பேட்டை சேர்ந்த ஜெயலலிதா பேரவை செயலாளர் நீலகண்டன் (40) என்பவரும் மாரடைப்பால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு சப்போர்ட் பண்ண கையோடு தமிழகத்தில் கால் பதித்த ராகுல் காந்தி.. காங்கிரஸார் உற்சாகம்!
விஜய் மீது பாச மழை பொழியும் காங்கிரஸ்.. தவெக சொன்ன 'அந்த' ஒரு வார்த்தை.. கதர் சட்டையினர் குஷி!