டிராபிக் ராமசாமி மீது செருப்பு விளக்குமாறு வீசிய காட்சி...! வயதை கூட பொருட்படுத்தாமல் மோசமாக நடந்துக்கொண்ட அதிமுக பெண் தொண்டர்..!

 
Published : May 07, 2018, 06:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
டிராபிக் ராமசாமி மீது செருப்பு விளக்குமாறு வீசிய காட்சி...! வயதை கூட பொருட்படுத்தாமல் மோசமாக நடந்துக்கொண்ட அதிமுக பெண் தொண்டர்..!

சுருக்கம்

admk lady supporter throw the slipper on traffic ramasamy

தற்போது மெரினாவில் ஜெயாவிற்கு மணிமண்டப தொடக்க விழாவிற்கு வைக்கபட்டு உள்ள அனைத்து பேனர்களை அகற்ற கூறி ட்ராபிக் ராமசாமி போராடினார். 

அதற்காக, காரின் மேல் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டிராபிக் ராமசாமி உடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வாகனத்தில் இருந்து அவரை கீழே  இறங்க சொல்லி கேட்டனர்.

அப்போது அவர் கீழே இறங்க மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், திடீரென அங்கிருந்த ADMK ஆதரவாளரான ஒரு பெண் மற்றும் மற்றவர்கள் டிராபிக் ராமசாமியின் வயதை கூட பொருட்படுத்தாமல் திடீரென  ராமசாமி மீது செருப்பை வீசினார்.

ஒரு பெண் தன் கையில் துடைப்பத்தை கொண்டு அடிக்க முற்பட்டார்.அதனையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட  ராமசாமியை  ஒரு கட்டடத்தில் காரின் மேலிருந்து இறங்க செய்தனர்.

ஆனாலும், டிராபிக் ராமசாமி இது போன்று பல பிரச்சனைகளுக்கு அவர் அடிக்கடி போராடுவது வழக்கம். வழக்கு தொடர்வதும் வழக்கம்.

ஆனால் அவருக்கென இருக்கும் தனி மரியாதை மற்றும் வயதை கூட பொருட்படுத்தாமல் செருப்பு மற்றும் விளக்குமாறு மூலமாக அவரை அடிக்க முற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அடேங்கப்பா... திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?
ஓயாமல் ஊத்தப்போகுதாம் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!