
வெப்பiச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது
மேலும், நாளை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
அதே வேளையில், இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறையில் 5 செ மீ மழையும், விருதுநகர் சாத்தூரில் 4 செ மீ மழையும் பதிவாகி உள்ளது
இந்நிலையில் நாளை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த இரண்டு தினங்களாக ஏற்காடு கோவை உள்ளிட்ட பல இடங்களில் நல்ல மழை பெய்து உள்ளது
இதே போன்று, வட மாநிலத்தில் புழுதியுடன் சூறை காற்று மற்றும் மழையின் காரணமாக 100 கும் மேற்பட்டோர் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.