ஜெ.வை தவிர வேறு யாருக்கும் அதிமுக பொது செயலாளர் தகுதி கிடையாது – ஓம் சக்தி சேகர் பரபரப்பு பேச்சு

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
ஜெ.வை தவிர வேறு யாருக்கும் அதிமுக பொது செயலாளர் தகுதி கிடையாது – ஓம் சக்தி சேகர் பரபரப்பு பேச்சு

சுருக்கம்

அதிமுக பொது செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே. அதற்கான தகுதி வேறு யாருக்கும் கிடையாது என புதுவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம், நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக சார்பில் இன்று லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் பி.புருஷோத்தமன் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர், அவர் பேசியதாவது:-

முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு அதிமுக தொண்டர்கள், தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும். தற்போதுள்ள முதல்வர் முதல் கடைகோடி தொண்டன் வரை அனைவரும் ஜெயலலிதாவை நிரந்தர பொது செயலாளர் என்றே அழைத்தோம்.

இந்த பதவியை வேறு எவருக்கும் தர்ககூடாது. நிரந்தர பொது செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். கட்சியின் தலைவர், பொறுப்பாளர் வேறு எவரையும் நியமித்துக்கொள்ளலாம். அப்படி பெயரை சூட்டிக் கொள்ளலாம்.

ஒவ்வொரு தொண்டனும் ஜெயலலிதாவுக்கு தந்த அங்கீகாரம் நிரந்தர பொது செயரலாளர் என்ற பதவியாகும். இதை தமிழக தலைமைக்கும் தெரிவித்து கொள்கிறோம். இக்கோரிக்கையை ஏற்கிறார்களோ இல்லையோ வலியுறுத்த வேண்டியது தொண்டனாகிய எனது கடமையாகும். அனைத்து தொண்டர்களும் இதையே விரும்புகின்றனர் என்றார் ஓம்சக்திசேகர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதுவை நகரின் மையப்பகுதியில் அரசு சார்பில் ஜெயலலிதாவுக்கு முழு உருவச் சிலை அமைக்க வேண்டும், புதிய மணிமண்டபம் கட்ட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் சொந்த நிலத்தில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் மணிமண்டபம் கட்டி ஜெயலலிதா முழு உருவச் சிலை நிறுவப்படும்.

நிர்வாகிகள் திருநாவுக்கரசு, காசிநாதன், காசிலிங்கம், பரசுராமன், மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு ஜெ. மறைவுக்காக கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி