
அரசு மானியங்கள் முதல் செல்போன் சேவை வரை ஆதார் எண் கட்டாயம் என்பது தெரிந்த ஒன்றே..
இந்நிலையில், பான் எண் வங்கி கணக்கு என அனைத்திலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து வந்தது .
இதற்கு பலவேறு தரப்பினர் இடையில் எதிர்ப்பு கிளம்பியதால், பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது
இந்நிலையில் வங்கி கணக்குடன், ஆதார் எண்ணை இணைப்பது காட்டாயம் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது
கே.ஒய்.சி எனப்படும் உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்துக் கொள்ளுங்கள் என்னும் நடைமுறைப்படி,வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கிகள் சரிபார்க்கும்.
இதற்காக வாடிக்கையாளர்கள் முகவரி, பான் எண் ஆகியவற்றை வங்கிகள் பெற்று வருகின்றன.
இதனை தொடர்ந்து வங்கி கணக்குடன் ஆதாரையும் கட்டாயம் இணைக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது
அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் வழங்க உள்ள இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
வங்கியில் பயோ மெற்றிக் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்பவர்களிடம் ஆதார் எண் பான் எண் அல்லது படிவம் எண் ஆகியவற்றை கேட்டு பெற வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இனைபதர்கான காலக் கெடுவை மத்திய அரசு கடந்த மாதம் நீட்டித்தது
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதும், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் காலக்கெடு அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது