பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கவில்லையா.! மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு

Published : Aug 12, 2025, 03:09 PM IST
Engineering counselling

சுருக்கம்

இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு துணைக் கலந்தாய்வில் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு 14.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Engineering counseling application extension: இளநிலை பொறியியல் (B.E / B.Tech) பட்டப்படிப்பு துணைக் கலந்தாய்வில் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு 14.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 12-ஆம் வகுப்பு பொது (Academic) மற்றும் தொழிற்கல்வி (Vocational) பயின்று சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் மற்றும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025-26 பொதுக் கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தவறிய மாணாக்கர்களும் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர்க்கை பெற வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

பொறியியல் படிப்பு- மாணவர்களுக்கு மீண்டும் ஒரு சான்ஸ்

துணைக் கலந்தாய்வில் மாணக்கர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (12.08.2025) வரை வழங்கப்பட்டிருந்தது. இந்த துணைக் கலந்தாய்வில் இதுவரை விண்ணப்பிக்காத மாணாக்கர்கள் தங்களது விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ள ஏதுவாக மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாணாக்கர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் 14.08.2025 வரை விண்ணப்பப் பதிவினை மேற்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி

மேலும், மாணாக்கர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின், தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 110 தமிழ்நாடு பொறியியற் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்களை (TFC Centres) தொடர்பு கொள்ளலாம். மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் வாயிலாகத் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனிக்கட்சியா..? அமித்ஷாவிடம் பேசியது என்ன? உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ்!
பாஜக, இந்து அமைப்புகளுக்கு விபூதி அடித்த திருப்பரங்குன்றம் மக்கள்..! ஒரு கடை கூட அடைக்கப்படவில்லை..