நாய் பிடிக்கிற வேனும், பாஜகவிற்கு ஆள் பிடிக்கிற வேலையும் ஒன்னு.. பாஜகவை கலாய்த்த நடிகை விந்தியா..!

By Raghupati R  |  First Published Mar 3, 2024, 5:09 PM IST

கார்ப்பேரேஷன் நாய் பிடிக்கின்ற வேனும், பாஜகவிற்கு ஆள் பிடிக்கின்ற வேலையும் ஒன்னு தான் என்று அதிமுகவை சேர்ந்த நடிகை விந்தியா பேசிய பேச்சு வைரலாகி வருகின்றது.


நடிகை விந்தியா பேசிய போது, “சமீபத்தில் பாஜக கட்சியில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ க்கள் இணைந்தனர் என்று ஒரே விளம்பரம் கொடுத்தார்கள். அவர்களை எல்லோரையும் பாஜக கட்சியில் சேர்த்ததற்கு பதில் ஏதேனும் முதியோர் இல்லத்தில் சேர்த்து இருந்தால் ஓட்டு கிடைக்குமோ, இல்லையோ, உங்களுக்கு புண்ணியமாவது கிடைத்திருக்கும் என்றும், இது தேர்தல் நேரம். ஆகவே அவரவர் மக்களை ஏமாற்றுவதற்கு கிளம்பி வருவார்கள் என்று பாஜக கட்சியை மறைமுகமாக சாடினார்.

 தொடர்ந்து பேசிய அவர், திமுக கட்சி போல, தமிழகத்தினையும், தமிழக மக்களையும் ஏமாற்ற நிறைய பேர் கிளம்பி வந்து கொண்டிருக்கின்றார்கள். திமுக பத்தாது என்ற குறைக்கு இன்றைக்கு பாஜக கட்சியும் கிளம்பி வருகின்றது. கார்ப்பேரஷேனுக்கும், பாஜக கட்சிக்கும் ஒன்றும் வித்யாசம் கிடையாது. கார்ப்பரேஷன் நாய் பிடிக்கின்ற வண்டியை வைத்து அலையராங்க, ஆனால், பாஜக கட்சி ஆள் பிடிக்கின்ற வண்டியை வைத்து அலையராங்க.

Tap to resize

Latest Videos

பாஜக கட்சியில் நீங்கள் சேரனுமா ? உங்களுக்கு சில தகுதிகள் இருக்கனும், நீங்கல் ஏதேனும் ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்கணும், நீங்கள் சீனியர் சிட்டிசனாக இருக்க வேண்டும், உங்களை உங்கள் குடும்பத்தினர் யாரும் மதிக்க கூடாது. 4 வது கண்டிசன், மோடியை தலைவராக பார்க்க வேண்டும், அண்ணாமலையை கடவுளாக பார்க்க வேண்டும்.

ஆகவே உங்களை வண்டியை ஏற்றி கொண்டு போவாங்க, டெல்லிக்கு விமானத்தில் கூப்பிட்டு போவாங்க, அதுக்கப்புறம் உங்களை கண்டுக்காம, விட்டு விடுவாங்க, அது வேற விஷயம், பாஜக பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி திருப்பூருக்கு வந்திருங்காங்க, நம்ம கூட அதிமுக கூட்டணி இல்லை, நான் (அண்ணாமலை) பேசி மொத்தமா, முடிச்சுட்டேன் என்று மோடியிடம் அண்ணாமலை சொன்னரா ? என்று தெரியவில்லை. தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி சிறப்பான ஆட்சி என்று அதிமுக விற்கு பிரச்சாரம் செய்தார் என்றும் கூறினார். 

பின்னர் பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை கட்சி தலைவரா ? இருப்பதற்கு பதில் எங்கயாவது வீடியோ எடுக்க போகலாம். ஏனென்றால் கூடவே இருப்பவர்களை எல்லாம் வீடியோ எடுத்து போடுகின்றார். மோடிக்கு தெரிந்த்து கூட அண்ணாமலைக்கு தெரியாதது, அண்ணாமலைக்கும், ஸ்டாலினுக்கும் வித்யாசம் கிடையாது என்றும், அவர் விடியல் தர்றேன் செல்கின்றார். ஆனால் அண்ணாமலை கூட இருக்கின்றவர்களையே வீடியோ எடுத்து போடுகின்றார்” என்று பேசினார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முதல் நடிகர் சுரேஷ் கோபி வரை.. பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்?

click me!