பெண்கள் முன்னேற்றம்னு பேசுற இந்த சமூகம்தான் பெண்களை இழிவுபடுத்துது...! நடிகை கஸ்தூரி ஆவேசம்

 
Published : Jun 06, 2018, 05:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
பெண்கள் முன்னேற்றம்னு பேசுற இந்த சமூகம்தான் பெண்களை இழிவுபடுத்துது...! நடிகை கஸ்தூரி ஆவேசம்

சுருக்கம்

Actress Kasthuri interview

நடிகை கஸ்தூரி, சமூகம் குறித்த கருத்துக்களை அண்மைக்காலமாக பதிவிட்டு வருகிறார். இதனால், அவருக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் எழுந்து வருகின்றன. அது மட்டுமல்லாமல், அவரது கருத்துக்கு சிலர், இழிவாகவும் பதிவிடுகின்றனர். நடிகை கஸ்தூரி இரு தினங்களுக்கு முன்பு, தான் டுவிட்டரில் பதிவிட்டது பற்றி நடிகரின் ரசிகர்கள் பலவாறு கருத்துக்கள் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவரிடம் பிரபல வெப்சைட் ஒன்று பேட்டி கண்டது. அப்போது, இழிவான டுவிட்டர் பதிவுகளை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை கஸ்தூரி, எனக்கு பேச்சுல இரண்டு நிலைப்பாடு இருந்தா பிடிக்காது. என்னை அவதூறா பேசுறதுக்கு முன்னாடி அவங்க முகத்தை
முதல்ல கண்ணாடியில பார்க்கச் சொல்லுங்க என்று காட்டமாக கூறியுள்ளார். டுவிட்டரில் நான் யார் பெயரையும் குறிப்பிடமல் பொதுவாக ஒரு டிரெய்லரைப்
பத்தி சொன்ன கமென்ட்டுக்கு எதுக்கு மத்தவங்க பொங்கி எழணும்? என்று கேள்வி எழுப்பினார். 

அப்போ அந்த ஹீரோவோட டிரெய்லர் பாடாவதியா இருக்குனு அவங்க ரசிகர்களுக்குப் புரிஞ்சிருக்குனுதானே அர்த்தம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டுமே மூன்று டிரெய்லர் ரிலீஸ் ஆகியிருக்கு. அதுல நான் எந்த டிரெய்லரைப் பற்றி கருத்து சொன்னா, மத்தவங்களுக்கு என்ன? உன் தொழிலுக்கு ஏற்றமாதிரி பேசு, உனக்கென்ன தெரியும்னு என்னை வம்புக்கு இழுக்குறதுல அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம் என்கிறார்.

ஆண்கள் தப்பு தப்பாக எது வேண்டுமானாலும் பேசலாம். பெண்கள் அதைக் கண்டித்து எதுவும் சொல்லக் கூடாது. நடிகைகள் கல்யாணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது. அப்படி நடித்தால் அவங்க குடும்பத்துக்கு துரோகம் பண்றாங்க. அவங்க கேரக்டர்ல தப்பு இருக்குன்ன சொல்றாங்க.

இதுவே நடிகர்கள் தொடர்ந்து நடிக்கும்போது, அவங்க செம கெத்து, தாத்தா வயசு நடிகர்கள் பேத்தி வயசு நடிகைகளோட டூயட் பாடுறதை இந்த சமூக மதிக்கும்.
பெண்கள் முன்னேற்றம் அடையணும்னு முற்போக்கா பேசுற இந்த சமூகம்தான், பெண்களை இழிவுபடுத்துகிறது. இதுபோன்ற சில விதிமுறைகள் சமூக
வலைத்தளங்களில் இருப்பதை தெரிந்து கொண்டதாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: தங்கம் மாதிரி ஏறும் முட்டை விலை! இனி ஆம்லேட் கனவுதான்.. விலை எவ்வளவு?
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!