பிரபல மூத்த நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமாக இருந்து வரும் குஷ்பூ, நேற்று புழல் பெண்கள் சிறையில் திடீர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதில் அங்கு உள்ள பெண் கைதிகளுக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்துள்ளார்.
ஜெயிலருடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்த குஷ்பூ. அங்கிருக்கும் கைதிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு ஒரு புதிய வாழ்வினை அமைத்து தருவதற்கும் தேவையான விஷயங்கள் குறித்து ஜெயிலருடன் கலந்தாலோசித்துள்ளார். மேலும் சிறையில் இருக்கும் பெண்கள் உருவாக்கிய பொருட்களை கண்டு அவர்களை வெகுவாக பாராட்டினார் குஷ்பூ.
சந்தர்ப்ப சூழ்நிலை ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்றும், அதை எவ்வாறு கடந்து சென்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றும் கைதிகளுக்கு அறிவுரை கூறியுள்ளார். குஷ்பூவை நேரில் கண்ட பெண்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
As a member of NCW, visited Puzhal jail for women yesterday. Had a long conversation with the jailer on how we can better the lives of the convicts and give them a new lease of life. Was pleasantly surprised to see the premise clean and kept in order. The convicts are looked… pic.twitter.com/JkFyWVkORC
— KhushbuSundar (@khushsundar)இந்நிலையில் தான் புழல் சிறைக்கு சென்று குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் அது பின்வருமாறு... ஒரு NCWன் உறுப்பினராக, நேற்று பெண்கள் புழல் சிறைக்கு சென்றேன், அங்கு இருக்கும் கைதிகளின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது, மற்றும் அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை எப்படி வழங்குவது என்பது குறித்து ஜெயிலருடன் நீண்ட நேரம் உரையாடினேன்.
வளாகத்தை சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருந்ததைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன். அங்கு குற்றவாளிகள் நன்கு கவனிக்கப்பட்டு, பொருளாதார ரீதியாக பாதுகாப்பிற்கு உதவக்கூடியவற்றைக் கற்றுக்கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதை இன்னும் எப்படி சிறப்பாக்குவது என்பது குறித்த எனது எண்ணங்களையும், யோசனைகளையும் பகிர்ந்துகொண்டேன் என்று கூறினார்.
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்