முதல் முறையாக களத்தில் இறங்கும் விஜய்.! ஆளுநரை நேரடியாக சந்திக்க முடிவு

Published : Dec 30, 2024, 11:22 AM IST
முதல் முறையாக களத்தில் இறங்கும் விஜய்.! ஆளுநரை நேரடியாக சந்திக்க முடிவு

சுருக்கம்

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்கள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தவெக விஜய் ஆளுநரை சந்திக்க முடிவு

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஞானசேகரன் என்பவனை கைது செய்து சிறையில் அடைந்தனர். இதனிடையே பாலியல் வன்கொடுமை தொடர்பாக போலீசாரிடம் மாணவி கொடுத்த வாக்குமூலம் எப்ஐஆராக பதிவு செய்யப்பட்டது. இந்த எப்ஐஆரில் மாணவின் பெயர், சொந்த ஊர், மொபைல் எண் உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெற்றிருந்தது. இந்த எப்ஐஆர் தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

வெளியான எப்ஐஆர்

பாலியல் வன்கொடுமை புகாரில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் ரகசியமாக பாதுகாப்பட வேண்டிய நிலையில் அனைத்து தகவல்களும் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்றம், தேசிய மகளிர் ஆணையம் கண்டித்துள்ள நிலையில் நேரடியாக விசாரணையையும் தொடங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த வாக்குமூலத்தில் சார் ஒருவருடன் ஒன்றாக இருக்க வேண்டுமம் எனவும் ஞானசேகரன் மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள காவல்துறை மாணவியை மிரட்டுவதற்காகவே சார் என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியதாக  கூறியதாக தெரிவித்தனர்.

ஆளுநரை சந்திக்கும் விஜய்

இருந்த போதும் இந்த விஷயத்தில் அரசு உண்மையை மறைப்பதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறது. இதனிடையே தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய விஜய், நேரடியாக களத்திற்கு வராமல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பனையூருக்கு அழைத்து நிவாரண உதவி வழங்கினார். அடுத்ததாக பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படத்திற்கும் வீட்டில் இருந்தே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் தமிழக ஆளுநரை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இன்று மதியம் 1 மணிக்கு சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. அப்போது பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்ககூடிய ஆளுநர் மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவார் என கூறப்படுகிறது. மேலும் திமுக அரசு தொடர்பாக புகார் அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு

முன்னதாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள கடிதத்தில்,  கல்வி வளாகம் முதற்கெண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்தும் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக  அவலகங்கள்,  சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று. பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக  மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்டைம் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்க எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை.  என்பது தெரிந்ததே என கூறியுள்ளார். மேலும் எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணணாகவும், அரணாகவும், எனவே எதைப்பற்றியும் கவலை  கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள் என விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காமராஜரை தப்பா பேசிய திமுக ஆட்சியை கவிழ்ப்பேன்.! திருச்சி வேலுச்சாமி ஆவேசம்
Tamil News Live today 14 December 2025: காமராஜரை தப்பா பேசிய திமுக ஆட்சியை கவிழ்ப்பேன்.! திருச்சி வேலுச்சாமி ஆவேசம்