ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஐய்..என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?

Published : Mar 01, 2024, 09:57 AM IST
ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஐய்..என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?

சுருக்கம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து வருகிறார். இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

நடிகர் விஜய் வாழ்த்து

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் வாழ்த்து

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், திரு மு.க.ஸ்டாலின்  அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

முதலமைச்சர் ஸ்டாலின் 71வது பிறந்நாள் கொண்டாட்டம்.! வாழ்த்து தெரிவித்த மோடி, தமிழிசை, அண்ணாமலை

PREV
click me!

Recommended Stories

பராசக்தி படம் எப்படி இருக்கு? கனிமொழி கொடுத்த ‘பளீச்’ பதில்!
டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!