ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்..! தீபாவளி வாழ்த்து சொல்லி மகிழ்ச்சி

By Ajmal Khan  |  First Published Oct 24, 2022, 10:12 AM IST

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினி காந்த் தனது போயஸ் கார்டன் வீட்டில் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார்.  புத்தாண்டு, தீபாவளி,  பொங்கல் பண்டிகைகளின் போது நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார் . அந்த வகையில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து கூற காலை முதலே ஏராளமான ரசிகர்கள் ரஜினிகாந்த் இல்லம் முன்பு கூடினர்.

Tap to resize

Latest Videos

கோவை சிலிண்டர் வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே காரணம்.! வெளிநாட்டு சதி.! மூடி மறைக்கும் திமுக- அண்ணாமலை ஆவேசம்

உற்சாகமடைந்த ரசிகர்கள்

இன்று காலை 9:30 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களை சந்தித்து கையசைத்து தீபாவளி வாழ்த்துக்களை கூறினார் . ரஜினியை கண்டதும் அவர் வீட்டின் முன்பு கூடி நின்றிருந்த ரசிகர்கள் ஆராவாரத்தோடு தலைவா, ஆண்டவரே என கோஷம் எழுப்பி, தீபாவளி வாழ்த்து கூறினர்.

சுமார் ஒரு நிமிடம் ரசிகர்களை சந்தித்த ரஜினி, மீண்டும் வீட்டிற்குள் சென்றார்.  ரஜினியை சந்தித்த பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிங்கப்பூரில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர். தீபாவளி அன்று ரஜினியை சந்தித்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினர்.
 

இதையும் படியுங்கள்

Diwali : நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்..! பிரதமர் மோடி வாழ்த்து

 

 

click me!