காவிரியில் தமிழகத்திற்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள தமிழர்களை தமிழகத்திற்கே அழைத்துக்கொள்ளுமாறு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் உருவாகும் காவிரி ஆறு தமிழகத்தை கடந்து தான் கடலில் கலக்கிறது. காவிரி கர்நாடகத்தில் உருவானாலும், அதிகமான தூரத்தை தமிழகத்தில் தான் கடக்கிறது. மேலும் காவிரியில் கர்நாடகா, தமிழகம், புதுவை, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கும் பங்கு உள்ளதா நீதிமன்றமும், வல்லுநர் குழுவும் தெரிவித்துள்ளது. எனினும், மழை பொய்த்து போகும் ஒவ்வொரு காலத்திலும் காவிரி எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற தொணியில் கர்நாடகா உரிமைக் கொண்டாடுவது வழக்கம்.
அரசியலுக்காக போராடும் கர்நாடகா
மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் என எந்த கட்சி ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், உள்ளூர் அரசியலுக்காக காவிரி நீரை திறந்து விடுவதில் கெடுபிடி காட்டுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தாலும், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தாலும் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 22 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை பலத்த பாதுகாப்புடன் கரைப்பு
வாழ்வாதாரத்திற்காக போராடும் தமிழகம்
இதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம், மத்திய அமைச்சர் என பல இடங்களில் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. இறுதியாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்துமாறு கர்நாடகாவிற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பின்னர் வேறு வழியின்றி தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீரை விடுவதாக கர்நாடகா துணைமுதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான சிவக்குமார் அறிவித்தார்.
ரஜினியின் நிலைப்பாடு?
இதனைத் தொடர்ந்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும். அவர் கர்நாடகாவின் பக்கம் நிற்பார் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் அவர் இனி கர்நாடகாவில் கால் வைக்கக் கூடாது.
பாஜகவை போல் மோசமான அரசியலை உலகில் எந்த கட்யும் செய்யாது - அமைச்சர் தங்கராஜ் விமர்சனம்
வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை
கர்நாடகாவில் இனி தமிழ் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும். கர்நாடகாவில் எத்தனை தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் காவிரி நீரை குடிக்க வேண்டாம் என்று தமிழக முதல்வரால் சொல்ல முடியுமா? இங்கு வாழும் தமிழர்களை உங்கள் மாநிலத்திற்கே அழைத்துக் கொள்ளுங்கள். காவிரி விவகாரத்தில் முதல்வர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.