
தங்களிடம் வாங்கிய பணத்திற்கு வட்டியை கூட கொடுக்க வேண்டாம், முதலை மட்டும் கொடுத்தால் போதும் எனவும் அன்புச்செழியன் உறவினர் கேட்டுக்கொண்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சசிக்குமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்புசெழியன்தான் எனவும் அவர் கொடுக்கும் கந்துவட்டி டார்ச்சர் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதிவைத்து விட்டு அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அன்புசெழியனுக்கு எதிராக திரையுலகினர் திரண்டு பேட்டியளித்தனர். கந்துவட்டியை ஒழிக்கவேண்டும் என கூக்குரலிட்டனர்.
இதையடுத்து அன்பு செழியன் மீது வழக்குகள் பதியபட்டுள்ளன.இதைதொடர்ந்து பைனான்சியர் அன்புச்செழியன் தலைமறைவானார். அதனால் அவர் தேடப்படும் நபர் என அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட பார்த்திபன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
அதில், தங்களிடம் வாங்கிய பணத்திற்கு வட்டியை கூட கொடுக்க வேண்டாம், முதலை மட்டும் கொடுத்தால் போதும் எனவும் அன்புச்செழியன் உறவினர் கேட்டுக்கொண்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.