
தமிழகத்தின் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப் பட்டுள்ளது.
நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் கன மழை மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடலோரத்தில் இருந்து பலத்த கடல்காற்றும் வீசும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்தம் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், நாகை, புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.