யார் கூவத்தூர் மாமா? கெட்ட வார்த்தைக்கு டிக்ஷனரி போட்டவன் நான்.. நேரடியாக வா..! விஜயை மிரட்டும் கருணாஸ்

Published : Nov 24, 2025, 03:11 PM IST
TVK Vijay

சுருக்கம்

சோசியல் மீடியாவில் சின்ன சின்ன பசங்களை வைத்துக் கொண்டு கெட்ட கெட்ட வார்த்தையில் பேசினால் நான் டிஸ்டர்ப் ஆகிடுவேன்னு நினைக்காதே. நாங்க கெட்ட வார்த்தைக்கே டிக்ஸ்னரி போட்டவங்க என விஜய்க்கு கருணாஸ் பதில் அளித்துள்ளார்.

நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் அண்மை காலமாக திமுகவுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகிறார். மேலும் திமுகவுக்காக நடிகர் விஜய்யையும் தொடர்ந்து வசை பாடி வருகிறார். அந்த வகையில் அண்மையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கருணாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “மக்களுக்கான தலைவர் என்றால் அவரது வீட்டு கதவுகள் எப்பொழுதும் திறந்த நிலையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் மக்கள் அவரை எளிதில் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் உங்களை பார்க்க வேண்டும் என்றால் நான் தனி விமானத்தில் வரவேண்டும் என்ற சூழல் இருக்கிறது. அப்படி இருக்கையில் நீங்கள் எப்படி மக்களுக்கான தலைவராக இருக்க முடியும்? மேலும் அந்த நடிகருக்கு தொடக்கத்தில் சம்பளத்தை உயர்த்தி வழங்கியதே ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான்.

மேலும் இணையதளத்தில் சின்ன சின்ன பசங்களை வைத்துக் கொண்டு என்னை கெட்ட வார்த்தையில் பேச வைக்கிறார்கள். அப்படி செய்தால் நான் டிஸ்டர்ப் ஆகிவிடுவேன் என்று நினைக்கின்றனர். ஆனால் நாங்கள் கெட்ட வார்த்தைக்காகவே தனி டிக்ஸ்னரி போட்டவர்கள். மேலும் என்னை கூவத்தூர் மாமா என சொல்கிறார்கள். நான் செய்திருந்தால் ஆமானு கூட சொல்லிட்டு போவேன். ஆனா பண்ணாம என்னசொன்னா சொல்றவனை மாமா ஆக்கிடுவேன். நீ அங்க போனா நான் அடுத்த இடத்துக்கு பொயிடுவேன் என்று கருணாஸ் மிரட்டும் தொணியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!