
நடிகர் ஜெய் விரைவில் கைது ? விரைவாரா அஞ்சலி..!
நடிகர் ஜெய், பிரேம்ஜி சென்ற கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் இவர்கள் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
"பார்ட்டி" படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதை கொண்டாடும் விதமாக, இன்றும் எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஓட்டலில் பார்ட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
பார்ட்டியில் சற்று மட்டையான நடிகர் ஜெய், நிஜ ஹீரோமாதிரி வண்டி ஒட்டி வந்துள்ளார்.ஆனால், சற்று தடுமாறி அடையாறு தடுப்பு சுவரில் மோதியதால், அவருடைய காரும் சற்று சேதம் அடைந்துள்ளது. மேலும் அவர் குடிபோதையில் கார் ஒட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதற்கான அபராதமாக ரூ.500 வசூலிக்கப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து குடி போதையில் கார் ஓட்டியது, பொது இடத்தில் சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களால் அவர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
இதன் காரணமாக நடிகர் ஜெய் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இதற்கு முன்னதாகவும் நடிகர் ஜெய் விபத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவர்மீது புகார் உள்ளது.
தற்போது சிக்கலில் உள்ள நடிகர் ஜெய்யை பார்ப்பதற்காக, அவருடன் கிசு கிசுவில் பேசப்பட்டு வரும் அஞ்சலி எதாவது ரியாக்ட் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது