ஆண்டுக்கணக்கில் திணறும் போலீஸ்..! கன்னித்தீவு கதை போல் நீளும் ராமஜெயம் கொலை வழக்கு..!

Asianet News Tamil  
Published : Sep 21, 2017, 04:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
ஆண்டுக்கணக்கில் திணறும் போலீஸ்..! கன்னித்தீவு கதை போல் நீளும் ராமஜெயம் கொலை வழக்கு..!

சுருக்கம்

Police announce 2 lakes rewards on Ramajayam Murder case

திமுக முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் துப்பு கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என  சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை நடந்து 5 ஆண்டுகளாகியும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை.  ராமஜெயம் கொலை வழக்கில் எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.

 ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் போலீசார். ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்துள்ளனர் போலீசார். 

நகரின் முக்கிய பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் மக்கள் ஆர்வமாக இந்த போஸ்டரை பார்த்து செல்கின்றனர். போலீசாரின் இந்த முயற்சி பயனளிக்கிறதா? என்பதை பார்ப்போம்.

PREV
click me!

Recommended Stories

பொங்கல் விழாவில் அரசியல் பேசாதீங்க.. மேடையில் அவமானப்பட்ட தவெக தலைவர்.. என்ன நடந்தது?
இனி 'இந்த' இருமல் மருந்து கிடைக்காது.. தமிழக அரசு அதிரடி தடை.. பின்னணியில் பகீர் காரணம்!