இனி சென்னை to மைசூர் புதிய விமான சேவை...! இனி நேரடியாக பறக்கலாம்..!

 
Published : Sep 21, 2017, 11:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
இனி சென்னை to மைசூர்  புதிய விமான சேவை...!  இனி நேரடியாக  பறக்கலாம்..!

சுருக்கம்

chennnai to mysore new airlines started yesterday

சென்னையிலிருந்து இனி நேரடியாக விமானம் மூலம்  பறக்க  இரண்டு புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.அதாவது, மைசூர், சென்னை, பல்லாரி வழியே ஒரு வழித்தடமும், ஹைதராபாத், பல்லாரி, ஹைதராபாத் வழியே மற்றொரு வழித்தடமும் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.

புதிய விமான சேவையின் முதல் கட்டமாக, முதல் வழித்தடத்தில் நேற்று விமான சேவை தொடங்கியது.அதனை தொடர்ந்து தற்போது  இரண்டாவது  வழித்தடத்தில் விமான சேவை தொடங்க உள்ளது.

இதன் மூலம் இனி வரும் காலங்களில்  மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு சேவையாக இது மாறும் என பெரும்பாலோனோர் கருத்து தெரிவித்து உள்ளனர்

மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 19 விமான நிலையங்களில் இருந்து இது போன்ற விமான சேவை  தொடங்க உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானத்தில் பயணம் செய்ய ஒருவருக்கு  ரூ.2,500க்குள் இருக்கும்  என  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!